உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓராண்டில் 20 ஆயிரம் வாகனம் பதிவு

ஓராண்டில் 20 ஆயிரம் வாகனம் பதிவு

திருப்பூர்;திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கடந்த ஓராண்டில், புதிதாக, 20 ஆயிரத்து, 221 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; விதிமீறிய வாகனங்களுக்கு, 38.46 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர், பூலுவப்பட்டி, அம்மன் நகரில் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் செயல்படுகிறது. எட்டு போடும் மைதானம், அணைப்பாளையத்தில் செயல்படுகிறது. கடந்த, 2023 ம் ஆண்டு அதிகபட்சமாக, 14 ஆயிரத்து, 648 டூவீலர்கள் (கியர்வண்டி), 1,003 மொபட், 3,290 கார், 983 சரக்கு கார், 18 ஆம்புலன்ஸ் உட்பட, மொத்தம், 20 ஆயிரத்து, 221 வாகனங்கள் புதியதாக, பதிவு செய்யப்பட்டுள்ளது.மொத்தம், 2,665 விதிமுறை மீறிய வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிமீறிய வாகனங்களுக்கு, 38 லட்சத்து, 46 ஆயிரத்து, 740 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறியதாக, 39 மினி பஸ், 790 சரக்கு வாகனங்கள், 175 ஆம்னி பஸ்கள், 105 சுற்றுலா வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக நவம்பர் ஒரு மாதத்தில் மட்டும், 275 விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் வழங்கி, எச்சரிக்கப்பட்டுள்ளது.ஓராண்டில் அதிகபட்சமாக சரக்கு வாகனங்களுக்கு, 14 லட்சத்து, 29 ஆயிரம், குறைந்தபட்சமாக ேஷர் ஆட்டோக்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், 39 மினிபஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கியும், ஒன்றுக்கு கூட இதுவரை அபராதம் விதிக்கப்படவில்லை.வட்டார போக்குவரத்து துறை அலுவலக அதிகாரிகள் கூறுகையில்,'சாலையில் விதிப்படி கவனமாக இயக்க வேண்டும். ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சுயஒழுக்கம் பின்பற்றி, ெஹல்மெட், சீட்பெல்ட் அணிந்த பயணத்தை தொடர்ந்தாலே விபத்தை தடுக்கலாம். விதிகளை மீறாமல் இருப்பது, சிறந்த வாகன ஓட்டிகளுக்கு அடையாளம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ