உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நாய்கள் குதறி 24 ஆடு பலி

 நாய்கள் குதறி 24 ஆடு பலி

காங்கயம்: காங்கயம், வட்டமலைபாளையம், திருமாயி தோட்டத்தை சேர்ந்தவர் சிவசுப்ரமணியம், 45; விவசாயி. நேற்று முன்தினம் இரவு, 90 ஆடுகளை தனது தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்தார். நேற்று காலை சென்று பார்த்த போது, நாய்கள் கடித்து, 16 ஆடுகள் இறந்த நிலையிலும், எட்டு ஆடுகள் காயத்துடனும் இருந்தன. இதுகுறித்து வருவாய்துறையினருக்கும், கால்நடை டாக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற முதலிபாளையம் கால்நடை டாக்டர் மருத்துவ உதவி செய்தனர். இருப்பினும், காயத்துடன் இருந்த ஆடுகளும் இறந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்