உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடிதடி வழக்கு 3 பேர் கைது

அடிதடி வழக்கு 3 பேர் கைது

பல்லடம்;திருப்பூர் பலவஞ்சிபாளையம் சேர்ந்தவர் குணா 25; கூலி தொழிலாளி. இவரது நண்பர்கள், முத்தணம்பாளையத்தை சேர்ந்த ஜெபராஜ், 24, பலவஞ்சிபாளையம் சங்கர், 24, செட்டிபாளையம் பிரபாகரன், 26.நான்கு பேரும், கடந்த, 31ம் தேதி, செட்டிபாளையத்தில் உள்ள மதுக்கடை ஒன்றில் மது அருந்தினர். அங்கு, முன்விரோதம் காரணமாக நான்கு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, கரைப்புதுார் அய்யம்பாளையத்தில் உள்ள குணாவின் வீட்டுக்குச் சென்ற சங்கர், பிரபாகரன், ஜெபராஜ் ஆகியோர், குணாவை தாக்கி காயப்படுத்தினர். காயமடைந்த குணா திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், சங்கர், பிரபாகரன், ஜெபராஜ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி