உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளி கொலை 3 பேர் சிக்கினர்

தொழிலாளி கொலை 3 பேர் சிக்கினர்

திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, புதுப்பாளையம் செல்லும் வழியில், உள்ள ஒரு காட்டுப்பகுதியில் கடந்த, 2-ம் தேதி ஒரு ஆண் சடலம் கிடந்தது. நல்லுார் போலீசாரின் விசராணையில், இறந்தவர் புதுப்பாளையத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி சரவணன்,46, என தெரிந்தது. கடந்த, 1ம் தேதி புதுப்பாளையம் டாஸ்மாக் கடையில் அவர் மது அருந்த சென்றுள்ளார். அவரது மொபைல் போன் மற்றும் பணத்தை பறிக்கும் நோக்கத்தில் மது போதையில், சரவணன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், சரவணனை கொலை செய்த முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த செல்வகுமார், 22, கவுதம், 24 மற்றும் தினேஷ், 25 ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ