உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழிப்பறி செய்த 3 பேர் கைது

வழிப்பறி செய்த 3 பேர் கைது

அவிநாசி; அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த வடமாநில வாலிபரான பங்கஜ்குமார் 23, என்பவரிடம் மொபைல் போன் மற்றும் ஆயிரம் ரூபாயை, 3 பேர் மிரட்டி வழிப்பறி செய்தனர்.இது குறித்து, அவிநாசி போலீசாரிடம் பங்கஜ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், விசாரித்த போலீசார், அவிநாசியை சேர்ந்த நடராஜ் மகன் பூமணி 28, பி.எஸ்., சுந்தரம் வீதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராஜா 29, ராயன் கோவில் காலனியை சேர்ந்த காந்தி மகன் திலக்ராஜா, 29 ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொபைல் போன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ