உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 3 பேரை காரில் கடத்தி ரூ.5 லட்சம், நகை பறிப்பு 5 பேர் கைது

3 பேரை காரில் கடத்தி ரூ.5 லட்சம், நகை பறிப்பு 5 பேர் கைது

திருப்பூர்:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்தவர் கலா 44, நிலத்தரகர் கணவர் இறந்து விட்டார். கலாவுக்கு தொழில் ரீதியாக பரமத்திவேலுாரை சேர்ந்த சுதா 43, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுதா அரவக்குறிச்சியை சேர்ந்த ஜெகதீஷ் 42, என்பவரை கலாவுக்கு அறிமுகம் செய்தார்.கடந்த 2023 அக். 21ம் தேதி ஜெகதீஷ் பழநி அருகே தொழில் ரீதியாக இடத்தை பார்வையிட கலாவை அழைத்தார். இதை நம்பி கலாவும் அவரது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி 44, டிரைவர் கார்த்திக் 35, ஆகியோர் ஐந்து லட்சம் ரூபாயுடன் காரில் புறப்பட்டு சென்றனர்.ஈரோடு - பழநி ரோடு காங்கயம் வழியாக சென்ற போது நள்ளிரவில் காரில் வந்த கும்பல் வழிமறித்தது. மூன்று பேரையும் காரில் கடத்தி சென்றனர்.காங்கயம் படியூர் அருகே இந்திராணி 48, என்பவர் வீட்டில் ஒரு நாள் முழுவதும் அடைத்து வைத்தனர். அவர்களிமிருந்து ஐந்து லட்சம் ரூபாய் 8 சவரன் நகை ஆகியவற்றை பறித்தனர். பின் கண்களை கட்டிய படி கொடுவாய் அருகே இறக்கி விட்டு சென்றனர். வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி சென்றனர்.இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிந்து சுதா இந்திராணி வீரபாண்டியை சேர்ந்த கார்த்திகேயன் 35, பெருந்தொழுவை சேர்ந்த சந்தோஷ் 34 மற்றும் பாண்டிதுரை 39 என ஐந்து பேரை கைது செய்தனர். ஜெகதீஷ் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை