உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 33 மாணவர்களுக்கு செவித்திறன் கருவி

33 மாணவர்களுக்கு செவித்திறன் கருவி

திருப்பூர்;அரசு பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு, இலவச செவித்திறன் கருவி வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில், செவித்திறன் பாதித்த, 214 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், 60 பேருக்கு செவித்திறன் கருவி தேவைப்படுவது கண்டறியப்பட்டு, அளவீடு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, 33 மாணவர்களுக்கான செவித்திறன் கருவிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.இதனையடுத்து, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மற்றும் இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், செவித்திறன் கருவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மாணவ, மாணவியருக்கு இலவச செவித்திறன் கருவிகளை வழங்கினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட உதவி அலுவலர் அண்ணாதுரை, இந்தியா தொண்டு நிறுவன அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை