மேலும் செய்திகள்
இலக்கை தாண்டிய பசுமைப் பயணம்!
25-Dec-2024
திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், வீரசோழபுரம் கிராமத்தில், 905 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்ட எல்லையில், 21 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல், இலக்கை தாண்டிய பயணமாக, 10வது திட்ட பயணம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மூன்று லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 3.40 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், வெள்ளகோவில் அருகே நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. வீரசோழபுரம் பகுதியை சேர்ந்த அப்புக்குட்டி என்பவரது தோட்டத்தில், மகோகனி -860, சந்தனம் -40, நாவல் -5 என, 905 மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
25-Dec-2024