உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவிலில் அனுஷ பூஜை :திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவிலில் அனுஷ பூஜை :திரளான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலை:உடுமலை செல்வ விநாயகர் கோவிலில், 'காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை' நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.உடுமலை ஜி.டி.வி., லே அவுட்டில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் சார்பில், ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நடந்தது.இப்பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் நேற்று வழிபாடு துவங்கியது. காலையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து மாலையில் அனுஷ நட்சத்திர பூஜை, வேத பாராயணம், குரு வந்தன பூஜை, சிவபுராணம், கோளறு திருப்பதிகம், திருத்தொண்டர் தொகை, விநாயகர் அகவல் பாராயணம் நடந்தது. ஓய்வுபெற்ற ஆசிரியர் மோகனசுந்தரம், 'குருமகிமை' தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் கூட்டு வழிபாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இந்த அனுஷ பூஜைக்கான ஏற்பாடுகளை, ஜி.டி.வி., லே அவுட் செல்வ விநாயகர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை