உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீட்கப்பட்ட கோவில்... மீண்டும் புதர்மயம்

மீட்கப்பட்ட கோவில்... மீண்டும் புதர்மயம்

பல்லடம்;மாதப்பூரில், 500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.கோவில் கருவறை, கல்வெட்டுகள், கல் துாண்கள் உள்ளிட்டவை புதரின் பிடியில் இருந்து மீட்கப்பட்டன. மாதப்பூர் ஊராட்சி நிர்வாகத்தின் துணையுடன், ஹிந்து அறநிலையத்துறை புதர்களை அகற்றி கோவிலை மீட்டெடுத்தது. ஆனால், கோவில் மீட்கப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள சூழலில், கோவிலை மீட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.கோவிலுக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்படவில்லை. ஓராண்டாக பராமரிப்பின்றி விடப்பட்டதால், மீண்டும் கோவில் புதர்களுக்குள் மறைந்து வருகிறது. கருவறையை சுற்றிலும், பார்த்தீனியம் செடிகள் முளைத்து கோவில் மூடி மறைந்து வருகிறது.இதே நிலை நீடித்தால், முன்னர் இருந்ததுபோல், கோவில் மீண்டும் மாயமாகிவிடும் என்பதுடன், கோவிலுக்கு சொந்தமான நிலங்களுடன், பழைய வரலாறும் மறைந்து போகவும் வாய்ப்பு உள்ளது.எனவே, பல நுாறு ஆண்டுக்கு பின் மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் கோவிலில், தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கோவிலை பராமரித்து, பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ