அமராவதி ஆற்றில் குளித்த வாலிபர் பலி
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடம், மானுார்பாளையத்தை சேர்ந்-தவர் மணிராஜ், 19; நண்பர்களான தினேஷ்குமார், 19, சபரீஸ்-வரன், 18, பரத்ராஜ், 18, கார்த்தி, 30, உள்ளிட்ட பலருடன், தாரா-புரம் பைபாஸ் சாலையில் உள்ள பாலம் அருகே அமராவதி ஆற்றில் நேற்று மாலை குளித்தார். எதிர்பாராத விதமாக மணிராஜ் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலின்படி விரைந்த தாராபுரம் தீய-ணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேரம் போராடி மணிராஜ் உடலை மீட்டனர்.