ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் ஆடிப்பெருக்கு பண்டிகை
திருப்பூர்; திருப்பூர், அம்மாபாளையத்தில் உள்ள ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில், ஆடிப்பெருக்கு பண்டிகை நடைபெற்றது. பள்ளி மைதானத்தில் அணை உருவாக்கப்பட்டு, விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம், நீர் நிலைகளுக்கு நன்றி சொல்வதன் காரணம் குறித்தும் விளக்கப்பட்டது. மாணவர்களின் பேச்சு, கிராமிய நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பள்ளி முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று, ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாடினர்.