உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்வு முடியும் வரை டிவி பார்க்க தடை விழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுரை

தேர்வு முடியும் வரை டிவி பார்க்க தடை விழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுரை

உடுமலை;தேர்வு காலம் முடியும் வரை பெற்றோர்கள், 'டிவி' தொடர்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என, பெற்றோர் ஆசிரியர் விழிப்புணர்வு கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 720 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். குறிப்பாக, 10ம் வகுப்பில், 96 பேர் படித்து வரும் நிலையில் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவும் உள்ளனர்.இந்நிலையில், அவர்களின் மதிப்பெண் சதவீதத்தை அதிகரிக்கச்செய்யும் வகையில், பெற்றோர் - ஆசிரியர் விழிப்புணர்வு கருத்தரங்கு பள்ளியில் நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார்.தொடர்ந்து, அரையாண்டுத்தேர்வில் முதல் மதிப்பெண் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் கவுரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து, தலைமையாசிரியர் பேசியதாவது: தேர்வு காலம் முடியும் வரை பெற்றோர்கள், 'டிவி' தொடர்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல, வீடுகளில், குழந்தைகள் எதிரே பெற்றோர்கள் சண்டையிடுவதை தவிர்த்து, அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.குழந்தைகளின் தவறான நடத்தையை கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டும். வகுப்பு ஆசிரியர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, குழந்தைகளின் படிப்பு திறனை கேட்டறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய முனைப்பு காட்ட வேண்டும்.இவ்வாறு, பேசினார்.ஆசிரியர்கள் மாரிமுத்து, உமாமகேஸ்வரி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி