தனித்து களமிறங்கவுள்ள நாம் தமிழர் கட்சி, திருப்பூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக, கோபியை சேர்ந்த சீதாலட்சுமியை நிறுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த தொழிற்சங்கத்தின் பொது செயலர் சக்திவேல் கூறியதாவது:பொதுவாக, தொழிற்சங்கம் துவங்கிய பின்னரே, அரசியல் கட்சி உருவாகும்; ஆனால், கட்சி துவங்கிய பின், தொழிற்சங்க செயல்பாடுகளில் வேகம் காட்டி வருகிறோம். மக்களிடம் கட்சிக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு தான் இதற்கு காரணம்.திருப்பூரில், பனியன் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்து, 18 தொழிற்சங்க பிரிவுகளை துவங்கவுள்ளோம்; விரைவில் அலுவலகம் திறக்கப்பட உள்ளது. பூத் வாரியாக நிர்வாகிகளை நியமித்து, கட்சிக்கான ஓட்டு வங்கியை உறுதிப்படுத்த கட்சித்தலைமை ஆலோசனை வழங்கியுள்ளனர். களப்பணியில், கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.காங்., ஓட்டு சேகரிப்புகாங்., மாவட்ட தலைவர் கிருஷ்ணன்: மத்திய அரசின் திட்டங்கள் தோல்வியை, மக்கள் விரோத சட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி, ஓட்டு சேகரித்து வருகிறோம். பூத் கமிட்டி பணி நிறைவடைந்து விட்டது. மண்டல வாரியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தெருமுனை பிரசாரத்தை போலவே, சமூக வலைதள பிரசாரம் வரை திட்டம் வைத்துள்ளோம். தொடர்ந்து, புதிய உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது.ம.நீ.ம., உத்வேகம்மக்கள் நீதி மய்யம் வடக்கு மாவட்ட செயலாளர் கமல்ஜீவா: டார்ச் லைட் சின்னம் மீண்டும் கிடைத்தது கட்சியினருக்கு புதிய உத்வேகமாக அமைந்துள்ளது. பூத் ஏஜென்ட் பணி, பத்து சதவீதம் மட்டுமே மீதமுள்ளது. தேர்தல் பணிக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை தலைமை வழங்கி வருகிறது. மேற்கு மண்டலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.ம.தி.மு.க., திட்டம்ம.தி.மு.க., மாநகர, மாவட்ட செயலாளர் நாகராஜ்: பூத் கமிட்டி வேலைகளை முடித்து தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். முதல்வர் செய்த சாதனை, பரப்புரை குறித்து எடுத்துக்கூறி வருகிறோம். கூட்டணி கட்சியை வெற்றிக்கு பாதைக்கு அழைத்து செல்ல உத்வேகத்துடன் பணியாற்ற கட்சி தலைமை கட்டளையிட்டுள்ளது. பலமான கூட்டணியாக இருக்கும்; அதற்கேற்ப அனைவரும் தேர்தல் பணிக்கு, வார்டு வாரியாக தயாராகியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தே.மு.தி.க., சிறப்புதே.மு.தி.க., மாவட்ட செயலாளர் குழந்தைவேல்: விஜயகாந்த் மறைவுக்கு பின், கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டு களமிறங்கியுள்ளோம். சட்டசபை, லோக்சபா தொகுதி வாரியாக பூத் ஏஜென்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வப்போது தலைமையில் இருந்து தேர்தல் பணி குறித்து விபரம் கேட்டறியப்படுகிறது. விஜயகாந்த் புகழை, அவரது லட்சியத்தை கிராம அளவில் எடுத்துக்கூறி, இப்போதிருந்தே ஓட்டு சேகரித்து வருகிறோம்.அ.இ.பா.பிளாக் வேகம்அகில இந்திய பார்வார்டு பிளாக், மாநில பொது செயலாளர் கர்ணன்: தற்போதைக்கு, 'இண்டியா' கூட்டணியில் நாங்கள் தொடர்கிறோம். கடந்த முறையில், உசிலம்பட்டியில் போட்டியிட்டோம். இந்த முறை கூட்டணி, தொகுதி முடிவு செய்த பின் அதற்கேற்ப பணியாற்றுவோம். திருப்பூரில், 30 பூத் கமிட்டி அமைத்துள்ளோம்.