அ.தி.மு.க., பொதுச்செயலாளருக்கு குன்னத்துாரில் உற்சாக வரவேற்பு
குன்னத்தூர்: குன்னத்துார் வந்தஅ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியை, உற்சாகம் பொங்க கட்சியினர் வரவேற்றனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜகிருஷ்ணன் இல்லதிருமண நிகழ்ச்சி குன்னத்துார் சங்கர் மஹாலில் நடந்தது. இதில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக அவருக்கு செங்கப்பள்ளி மற்றும் திருமண மண்டபத்தில் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், விஜயபாஸ்கர், தங்கமணி, எம்.எல்.ஏ ஜெயக்குமார், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.