| ADDED : டிச 10, 2025 09:10 AM
திருப்பூர்: ஏ.ஐ.டி.யு.சி. கட்டட தொழிற்சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று, தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சேகர், மாவட்ட பொது செயலாளர் நடராஜன், மாவட்ட தலைவர் மோகன் போராட்டத்தை விளக்கி பேசினர். வாரிய முடிவின்படி, ஓய்வூதியத்தை, 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், விரைவில், 6,000 ரூபாய் வழங்க வேண்டும். அனைவருக்கும் வீடு திட்டத்தில், தேர்தலுக்கு முன்னதாக மானியம் வழங்க வேண்டும். விபத்து சிகிச்சை, விபத்துகால நிவாரணம், மரணத்துக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்ட நலவாரிய அலுவலகங்களில் ஏஜென்ட் என்ற பெயரில் சிலர் செய்யும் ஊழல் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.