உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நாச்சிபாளையம் விபத்து மேலும் ஒரு வாலிபர் பலி

 நாச்சிபாளையம் விபத்து மேலும் ஒரு வாலிபர் பலி

பொங்கலுார்: கொடுவாய், சக்தி விநாயகபுரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் மகன் சரவணன், 14, அவரது அண்ணன் கார்த்திக், 22, குமார் மகன் அருண்,22 ஆகிய மூவரும் கடந்த 3ம் தேதி பைக்கில் சென்றனர். திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது, கோவையிலிருந்து காங்கயம் நோக்கி சென்ற கார் மோதியதில் சரவணன் அதே இடத்தில் இறந்தார். கார்த்திக், அருண் ஆகியோர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். சிகிச்சையில் இருந்த அருண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை