உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

பல்லடம்: பல்லடம் - திருச்சி ரோட்டில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மின் இணைப்புக்காக உதவி செயற்பொறியாளர் சுரேஷ்பாபு, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை தொடர்ந்து, கையும் களவுமாக பிடித்தவர்கள் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ