உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு

உடுமலை; ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்கும் வகையில், வலிமையான சட்டம் இயற்ற வேண்டும், என, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடுமலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் சுகந்தி, மாவட்ட செயலாளர் கனகராஜ், பொருளாளர் பஞ்சலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்கும் வகையிலும், பாதுகாப்பு வழங்கும் வகையிலும், வலிமையான சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தாமதமில்லாமல் இழப்பீடு வழங்கவும், போலீசில் தனி பிரிவு உருவாக்கவும், தாட்கோ திட்டங்களுக்கு தாலுகா அளவில் முகாம்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட தலைவராக ஞானசேகர், செயலாளர் பரமசிவம், பொருளாளர் சண்முகம், துணைத்தலைவர்களாக, பஞ்சலிங்கம், நந்தகோபால், செல்வி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை