உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சட்டசபை குழுவினர் ஆய்வு ஒத்திவைப்பு

 சட்டசபை குழுவினர் ஆய்வு ஒத்திவைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடப்பதாக இருந்த சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டசபை உறுப்பினர்களாக உள்ள எம்.எல்.ஏ.,க்களை தலைவர் மற்றும் உறுப்பினர்களாக கொண்ட சட்டசபை மதிப்பீட்டு குழு செயல்படுகிறது. சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்பாடு; வளர்ச்சிப் பணிகள் நிலவரம், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கோரிக்கைகள் ஆகியன குறித்தும் இந்த குழு நேரில் சென்று கள ஆய்வு செய்தும், ஆய்வுக்கூட்டம் நடத்தியும் அறிக்கை அளிக்கும். அவ்வகையில் நடப்பாண்டுக்காக இக்குழுவின் வருகை மற்றும் ஆய்வு திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடக்கவிருந்தது. இந்நிலையில், இந்த ஆய்வு திடீரென ரத்து செய்யப்பட்டு, வரும் டிச. 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12ல் வேலை நிறுத்தம் அரசு துறைகளில் உள்ள அலுவலகங்களில் அதிகாரிகளின் வாகனங்கள் இயக்கும் ஓட்டுனர்கள் வரும், 12ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். அரசு துறை வாகன ஓட்டுனர் சங்கம் இதை அறிவித்து அன்று உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் ஓட்டுனர்களும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். 12ம் தேதி சட்டசபை குழு திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டால், குழுவினர் மற்றும் அரசு அலுவலர்கள் செல்லும் வாகனங்கள் இயக்க ஓட்டுனர்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ஆய்வு 12ம் தேதி நடப்பதற்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்