உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஐயப்ப பக்தர் மீது தடியடி; பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம்

ஐயப்ப பக்தர் மீது தடியடி; பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க தவறிய கேரள அரசு மற்றும் தமிழக பக்தர்களை பாதுகாக்க தவறிய தி.மு.க., அரசு ஆகியோரை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், அவிநாசி ரோடு, புஷ்பா சந்திப்பு அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மலர்கொடி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் மணி, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாநில பொது செயலாளர் முருகானந்தம் பேசுகையில், ''ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கில் சபரிமலைக்கு செல்கின்றனர். ஆண்டுதோறும் பக்தர் கூட்டம் அதிகரிக்கிறது. இதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு, வசதிகளை செய்து கொடுக்க கேரள அரசு தவறி விட்டது.தமிழக பக்தர்கள் மீது தடியடி நடத்துகின்றனர். இவ்விஷயத்தில், தமிழக அரசு பாரமுகமாக உள்ளது. உடனடியாக, அம்மாநில அரசை அழைத்து பேசி, பக்தர்களை கண்ணியமாக நடத்த அறிவுறுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்