உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாழைத்தார் ஏலம்; இடைத்தரகருக்கு இடம் இல்லை

வாழைத்தார் ஏலம்; இடைத்தரகருக்கு இடம் இல்லை

அவிநாசி;சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், பல ஆண்டுகளுக்கு பின் துவங்கிய வாழைத்தார் ஏலத்தில், கிலோவுக்கு, 21.50 ரூபாய் வரை விலை கிடைத்தது.அவிநாசி, சேவூர், குன்னத்துார் பகுதிகளில், 4,500 முதல், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் வாழை சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் அவை கேரளாவுக்கு 'சிப்ஸ்' தயாரிப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.வாழைத்தார் வியாபாரத்தில் வியாபாரிகள், விவசாயிகளுக்கு இடையே 'புரோக்கர்'கள் தான் பாலமாக செயல்படுகின்றனர். 'புரோக்கர்' வாயிலாக தான், கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் வியாபாரிகள், விவசாயிகளின் தோட்டங்களுக்கே சென்று வாழைத்தார் வெட்டி எடுத்து செல்கின்றனர்.புரோக்கர் தலையீடு இல்லாமல், எந்தவொரு வியாபாரியாலும் வாழைத்தாரை வெட்டி எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு, அவர்களின் ஆதிக்கம் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்து வந்த வாழைக்காய் ஏலத்தை மீண்டும் நடத்த கூட்டுறவு துறை முடிவெடுத்தது.நேற்று ஏல மைய கண்காணிப்பாளர் சந்திரமோகன் மேற்பார்வையில், வாழைத்தார் ஏலம் நடந்தது. மூன்று விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனர்; 232 கிலோ எடையிலான வாழைக்காய்கள்கொண்டுவரப்பட்டிருந்தன. இ-நாம் வாயிலாக நடந்த ஏலத்தில், வியாபாரிகள் பங்கேற்றனர். 4,278 ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டது. முதல் தரம் நேந்திரன், கிலோ, 20.50 முதல், 21.50 ரூபாய், மூன்றாம் தர நேந்திரன், கிலோ, 10 ரூபாய் வரை விலை கிடைத்தது.விற்பனை கூட கண்காணிப்பாளர் கூறுகையில், 'விவசாயிகள், நேரடியாக வாழைத்தார் வியாபாரிகளிடம் விற்று, நஷ்டமடைவதை தவிர்த்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வாயிலாக நடைபெறும் மறைமுக ஏலத்தில் விற்று, கூடுதல் லாபம் பெற்று பயன்பெற வேண்டும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ