திருப்பூரில் வங்கதேச வாலிபர் கைது
திருப்பூர்: திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேச வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்; நான்கு மாதங்களில், 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாண்டியன் நகர், இந்திரா நகரில் வடமாநிலத்தினர் தங்கியுள்ள பகுதியில், முகமது சாஹின், 24, என்பவரை வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர்.பிச்சம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதும், ஏழு ஆண்டாக திருப்பூரில், உரிய ஆவணங்கள் இன்றி தங்கியுள்ளதும் தெரிந்தது. இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.இதைத் தொடர்ந்து வேலம்பாளையம் போலீசார், நேற்று அவரை கைது செய்தனர். மேலும், இவரது நண்பர்கள் யாராவது முறைகேடாக தங்கியுள்ளனரா என்றும் விசாரிக்கின்றனர்.