உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில்வே ஸ்டேஷனில் தடுப்பு கம்பி அமைப்பு; பாதுகாப்புக்கு அச்சாரம்

ரயில்வே ஸ்டேஷனில் தடுப்பு கம்பி அமைப்பு; பாதுகாப்புக்கு அச்சாரம்

திருப்பூர்;திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் உள்வளாகம், வெளிப்புறம் விரிவுபடுத்தி கட்டும் பணி நடந்து வருகிறது. சரக்கு முன்பதிவு அலுவலகம் அருகே பயணிகள் உள்ளே சென்று, திரும்ப தற்காலிக வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.அவ்வழியில், கார், ஆட்டோ, டூவீலர்கள் இடையூறாக நிறுத்தப்பட்டது. இதனால், ரயில் விட்டு இறங்குவோர், ரயில் ஏற செல்வோர் உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, இரண்டு பிளாட்பார்மில் அடுத்தடுத்து ரயில் வரும் பீக்ஹவர்ஸ் நேரங்களில், இடையூறால், பயணிகள் ஒருவரை ஒருவர் மோதிக் கொள்வது போன்ற சூழல் உருவாகியது.இதனால், முகப்பு பகுதியில், வாகன ஓட்டிகள் (டூவீலர் உட்பட) யாரும் நுழைய முடியாத வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் மட்டும் நடந்து சென்று, திரும்பும் வகையில் வழிவிடப்பட்டுள்ளது. இதனால், சரக்கு முன்பதிவு மையத்துக்கு வரும் வாகனங்கள், தலைமை தபால் அலுவலகம் வழியே, லாரி கூட்ஸ்ெஷட் சென்று, ஆர்.பி.எப்., ஆபீஸ் வழியாக ஸ்டேஷனுக்கு வருகின்றன.-------------------ரயில்வே ஸ்டேஷனில் இடையூறாக டூவீலர் நிறுத்துவதை தடுக்க, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ