உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அவிநாசி கோவிலுக்கு அழகிய நுழைவாயில்

 அவிநாசி கோவிலுக்கு அழகிய நுழைவாயில்

அவிநாசி: கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாகவும், முதலை உண்ட பாலகனை உயிருடன் மீட்டெடுத்த தலமாக போற்றப்படும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், 2024, பிப். 2ம் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக கோவிலில் பல்வேறு புனரமைக்கும் மரமாத்துப் பணிகள் நடைபெற்றது. அதில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் வட மாநில பக்தர்கள் பெருமளவில் விசேஷ நாட்களில் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது கோவை மெயின் ரோட்டில் கோவிலுக்கு செல்லும் வழியில் பக்தர்களுக்கு கோவிலை எளிதில் அடையாளம் காணும்படி அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நுழைவாயில் தோரணம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக, உபயதாரர்கள் வாயிலாக பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள நுழைவுவாயில், அனைவரையும் கவர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை