உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போகி கொண்டாட்டம் பொங்கல் உற்சாகம் காணும் பொங்கல் களைகட்டுமா? மாட்டுப்பொங்கல் மகத்துவம்

போகி கொண்டாட்டம் பொங்கல் உற்சாகம் காணும் பொங்கல் களைகட்டுமா? மாட்டுப்பொங்கல் மகத்துவம்

வறுமையைப் போக்கி...துன்பத்தைப் போக்கி...கோபத்தைப் போக்கி...தீமைகளையெல்லாம்போக்கக்கூடியது போகி திருப்பூரில் நேற்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.தை முதல் ஆனி மாதம் வரையிலான காலம் உத்தராயணம்; ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான மாதங்கள் தட்சிணாயனம். நேற்றுடன், தட்சிணாயனம் நிறைவுற்று, உத்தராயணம் பிறக்கிறது. சூரிய பகவான், மகரத்தில் பிரவேசிக்கும் காலத்தில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தியுடன், 'போகி'யும் கொண்டாடப்படுகிறது.தை மாதத்தை வர வேற்கும் வகையில், பழைய பொருட்களை எரித்து 'போகி' கொண்டாடு கின்றனர்.வேளாண் பயிர் அறுவடை துவங்கும் நேரம்; சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், புதிய அரிசியில் பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து வழிபடுகின்றனர். இதையொட்டி, முந்தைய நாளில், வீட்டை சுத்தம் செய்து, பழைய பொருட்களை பொதுமக்கள் அகற்றினர். வீடு, தொழிற்சாலை, கடைகளில், நேற்று காப்புக்கட்டினர்.வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ ஆகியவற்றை, வீட்டின் நான்கு மூலைகளிலும், கதவின் மேற்புறமும் செருகி வைத்தனர். கோவில் களிலும், இதே போல் காப்புக் கட்டப்பட்டது. இரவு துவங்கும் நேரத்தில், கழிக்கப் பட்ட பொருட்களை எரித்துவிட்டு, மறு நாள் தை பொங்கல் கொண்டாட தயாராகிவிட்டனர்.இனி... நடந்ததை நினைக்க வேண்டாம்இழந்ததை தேட வேண்டாம் தொலைத்ததை எண்ண வேண்டாம்எண்ணியதை மறக்க வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !