உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடை, வீடுகளில் கருப்புக்கொடி; ஜி.என்., கார்டனில் போராட்டம்

கடை, வீடுகளில் கருப்புக்கொடி; ஜி.என்., கார்டனில் போராட்டம்

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல் அடுத்த ஜி.என்., கார்டன் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது.''குப்பை கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. குடியிருக்க இயலவில்லை'' எனக்கூறி, அப்பகுதியினர் மற்றும் சர்வ கட்சியினர், பத்திர எழுத்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதை மீறி போலீஸ் பாதுகாப்புடன் அங்கு குப்பை கொட்டப்படுகிறது.குப்பை கொட்டு எதிர்ப்பு தெரிவித்தும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், நேற்று பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் நெருப்பெரிச்சல் மற்றும் ஜி.என்., கார்டன் பகுதியில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.இன்று ஜி.என்., கார்டன் ஸ்டாப் அருகில் காத்திருப்பு போராட்டத்தை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை