உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாரத் டெக்ஸ் கண்காட்சி மூலம் பிராண்ட் அறிமுகம் எளிதாகிறது

பாரத் டெக்ஸ் கண்காட்சி மூலம் பிராண்ட் அறிமுகம் எளிதாகிறது

திருப்பூர்; 'பாரத் டெக்ஸ் கண்காட்சி வாயிலாக, புதிய பிராண்ட்களை சர்வதேச அளவில் அறிமுகம் செய்வது எளிதாகியுள்ளது' என்று தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.'பாரத் டெக்ஸ் -- 2025' கண்காட்சி, இந்தியாவின் ஜவுளித் தொழில் மேம்பாட்டுக்கான, கண்காட்சியாக நடந்து முடிந்துள்ளது. நாட்டின் ஜவுளித் தொழிலை ஊக்குவித்து, மூலப்பொருட்கள் முதல், உயர் தொழில்நுட்ப துணிகள் வரை இந்தியாவின் ஜவுளித் திறன்களைகாட்சிப்படுத்தியுள்ளது.

புதுமை வாய்ப்புகள்

இதுவரை இல்லாத வகையில், 'ஏ.ஐ.,' தொழில்நுட்பம், ஆட்டோமேஷன் மற்றும் 'ஸ்மார்ட்' ஜவுளி போன்ற புதிய தொழில்நுட்பங்கள், ஜவுளித்துறையில் இடம்பிடிக்க வழி ஏற்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் துவக்க நிலையை ஊக்குவிக்கும் வகையில், ஜவுளி 'ஸ்டார்ட் - அப்'களுக்கான புதுமை மற்றும் நிதி வாய்ப்புகள் குறித்து தெரியவந்துள்ளது.

தொழில்துறை மகிழ்ச்சி

'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்ம நிர்பார் பாரத்' போன்ற முயற்சிகளை ஜவுளித்துறை ஆதரிக்கிறது. 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி ஜவுளி வளர்ச்சிக்கான ஊக்கியாகவும் மாறியுள்ளதாக, பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்ட வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், ''ஏற்றுமதியாளர்கள் மட்டுமல்லாது, சில்லரை விற்பனையாளர்கள், சப்ளையர்கள் இணையவும், 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி வாய்ப்பாக இருந்தது.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகம் பயனடைந்துள்ளன. புதிய தொழில்நுட்பங்களை, பிறருக்கு பகிரவும் வாய்ப்பாக இருந்தது. 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி மூலமாக, சர்வதேச சந்தைகளில் புதிய 'பிராண்ட்'களை அறிமுகம் செய்வதும் எளிதாக மாறியுள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ