உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அகலாத ஆக்கிரமிப்பு... குறுகிய சாலை

அகலாத ஆக்கிரமிப்பு... குறுகிய சாலை

பல்லடம்;ஆக்கிரமிப்பு காரணமாக, அருள்புரம் - உப்பிலிபாளையம் ரோடு, குறு கலாக உள்ளது.பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அருள்புரம் பகுதியில், ஏராளமான குடியிருப்புகள், பனியன் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளிட்டவை உள்ளன. அருள்புரம்- - உப்பிலி பாளையம் ரோட்டை ஏராளமான தொழிலாளர்கள், அரசு பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ரோடு வாகன போக்குவரத்து நிறைந்து எந்நேரமும் பரபரப்பாக காணப்படும். வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த ரோட்டில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்கள் இடையூறு இன்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுதொடர்பாக, பல்லடம் ஒன்றிய குழு கூட்டத்திலும் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், இந்த வழித்தடத்தில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது.ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழித்தடத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை