உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வணிகர்கள் இன்று கடிதம்

மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வணிகர்கள் இன்று கடிதம்

திருப்பூர்; சொத்துவரி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென, திருப்பூர் அனைத்து வணிகர் சங்க பேரவை, மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சியில், அபரிமிதமான சொத்து வரி உயர்வால், தொழில் பாதிப்பதாக, தொழில் அமைப்பினரும், அனைத்து வணிகர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். அனைத்து வணிகர் சங்க பேரவை சார்பில், 10 நாட்கள் கருப்புக்கொடி போராட்டம், ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் ஆகியன நடந்தன.சொத்துவரி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, மாநகராட்சியின், 60 கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்ப பேரவையினர் திட்டமிட்டுள்ளனர். ''சிறப்பு கூட்டம் நடத்தி, சொத்துவரி உயர்வுக்கு எதிராகவும், வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., விதித்துள்ளதை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்'' என, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.திருப்பூர் அனைத்து வணிகர் சங்க பேரவை தலைவர் துரைசாமி கூறியதாவது:மாநகராட்சியின், 60 வார்டு கவுன்சிலர்களுக்கும், இன்று(26ம் தேதி) கோரிக்கை கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அனைத்து கட்சி கவுன்சிலர்களும், சிறப்பு கூட்டம் நடத்த வலியுறுத்த வேண்டும். சிறப்புக்கூட்டம் நடத்தி, சொத்துவரி உயர்த்தியதை மறுசீரமைப்பு செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அனைத்து கவுன்சிலர்களுக்கும், மக்களுக்கு நேர்ந்த பாதிப்பை நீக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.அதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 60 கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்புகிறோம். அடுத்தகட்டமாக, வரும் வாரத்தில், வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டாக சென்று, கலெக்டர், மேயர், கமிஷனர் ஆகியோரிடம் நேரில் வலியுறுத்தி, மனு கொடுக்கவும் உத்தேசித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி