உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தி.மலை அன்னதானம் சேவை செய்ய அழைப்பு

 தி.மலை அன்னதானம் சேவை செய்ய அழைப்பு

திருப்பூர்: திருவண்ணாமலை சேவா டிரஸ்ட் செயலாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், வரும் டிச., 3ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடக்க உள்ளது. திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா அன்னம் பாலிப்பு திருப்பணிக்குழு சார்பில், 43ம் ஆண்டாக, ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பக்தர்கள் வசதிக்காக, 16 திருமண மண்டபங்களில், 42 ஆண்டுகளாக அன்னதானம் வழங்கும் சேவை நடந்து வருகிறது. திருப்பூர் மக்கள் பங்களிப்புடன், ஐந்து டன் காய்கறிகள், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை நன்கொடையாக பெற்று, சேவை தொடர்கிறது. அன்னதான பணிக்காக, 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இந்தாண்டு தீபத்திருவிழா அன்னதானத்தில் சேவையாற்ற விரும்பும் சேவார்த்திகள் வரவேற்கப்படுகிறார்கள். அன்னதானத்துக்கு மளிகை பொருட்கள் வழங்குவோரும், பணியாற்ற விரும்பும் தன்னார்வலர்களும், திருப்பணிக்குழு இணை செயலாளர் முருகேசன்,பொருளாளர் மோகனசுந்தரம் ஆகியோரை, 94434 79279, 93616 26363 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை