உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழைய பொருட்கள் சேகரிப்பு

பழைய பொருட்கள் சேகரிப்பு

திருப்பூர்; திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான உபயோகமற்ற பொருட்களின் மறுசுழற்சி போட்டி நடந்தது. இதில், கல்லுாரி மாணவியர் தங்களது வீட்டில் பயன்படுத்தாமல் உள்ள பழைய பொருட்களை சேகரித்து கொண்டு வந்து கல்லுாரியில் கொடுத்தனர். இதனை, திருப்பூர் துப்புரவாளன் அமைப்பு இயக்குனர் பத்மநாதன், மேலாளர் கோகுலகிருஷ்ணன், கல்லுாரி முதல்வர் வசந்தி ஆகியோர் பெற்று கொண்டனர். மொத்தம், ஆயிரத்து, 100 கிலோ சேகரிக்கப்பட்டது. மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ