உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நலவாழ்வு மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

நலவாழ்வு மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருப்பூர்:திருப்பூர் - அவிநாசி ரோட்டிலுள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நலவாழ்வு மையத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு செய்தார்.நலவாழ்வு மையம், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், 10 படுக்கை வசதிகளுடன் இயங்குகிறது. தினமும் 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பொது, பல் சிகிச்சை, மகப்பேறு, தோல் சிகிச்சை, மனநலம் போன்ற மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகாதார சேவைகள் சென்றடையவேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது, சுகாதார மைய அலுவலர் நவீன்குமார் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ