உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊராட்சி தலைவர் கணவர் மீதுமக்கள் சேவை முகாமில்  புகார்

ஊராட்சி தலைவர் கணவர் மீதுமக்கள் சேவை முகாமில்  புகார்

திருப்பூர்;காங்கயம், ஆலாம்பாடி ஊராட்சியில் நேற்று நடந்த மக்கள் சேவை திட்ட முகாமில் ஊராட்சி தலைவர் மீது புகார் தெரிவித்து மனு அளிக்கப்பட்டது.இதில் அப்பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ் உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்:ஆலாம்பாடி ஊராட்சி தலைவர் ராஜாமணி, அவர் கணவர் ரங்கசாமி. இருவரும் நெய்க்காரன்பாளையத்தில் க.ச.எண் 133ல் இரண்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். கடந்த கிராம சபை கூட்டத்தில் கேட்ட போது உரிய விளக்கம் தரவில்லை. அதே போல் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அவர்கள் உறவினர் ஒரு வீடு கட்டியுள்ளார். அதற்கு இவர்கள் உடந்தையாக உள்ளனர்.சென்னிமலைக் கவுண்டன் வலசில் துணை தலைவர் வீடு அருகே கழிவு நீர் குழி உள்ளது. அதே இடத்தில் குடிநீருக்குப் பயன்படுத்தும் ஆழ் குழாய் கிணறு உள்ளது. இங்குள்ள கழிவு நீர் குழியை அகற்ற வலியுறுத்தியும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்