உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அபாய வளைவுகளால் அதிகரிக்கும் நெரிசல் விரிவாக்க தேவை திட்டம்

அபாய வளைவுகளால் அதிகரிக்கும் நெரிசல் விரிவாக்க தேவை திட்டம்

உடுமலை: போக்குவரத்து அதிகரித்துள்ள, செஞ்சேரிமலை ரோட்டில், அபாய வளைவுகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாததால், விபத்துகள் அதிகரித்து வருகிறது.உடுமலையிலிருந்து பெதப்பம்பட்டி வழியாக செஞ்சேரிமலை செல்லும் ரோடு, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ் பராமரிக்கப்படும், இந்த ரோட்டில், பெதப்பம்பட்டி சுற்றுப்பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களுக்கும், செஞ்சேரிமலை, சூலுார் மற்றும் கோவைக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இப்பகுதியில், தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் போக்குவரத்தினை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், எப்போதும் போக்குவரத்து அதிகளவில் காணப்படுகிறது.காற்றாலைகள் மற்றும் நுாற்பாலைகள் அதிகரித்துள்ளதால், இந்த ரோட்டில் கனரக வாகன போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளில், பல மடங்கு உயர்ந்துள்ளது.இந்த ரோட்டில் குறிஞ்சேரி, புக்குளம், வெள்ளியம்பாளையம் பிரிவு, வாய்க்கால் பாலம், பொட்டிநாயக்கனுார் பிரிவு உட்பட பகுதிகளில், அபாய வளைவு பகுதிகள் உள்ளன. இவ்வளைவுகளில், சமீபமாக விபத்துகள் அதிகரித்துள்ளது.இவை வாகன ஓட்டுநர்களுக்கு தீராத தலைவலியாக இருந்து வருகிறது. பொட்டிநாயக்கனுார் பிரிவு பகுதியில், பஸ்கள் நிறுத்தப்படும் போது, அப்பகுதி வழியாக செல்ல முடியாமல், பிற வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும், தொடர்ச்சியாக இரு வளைவுகள் வருவதால், விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.வளைவு பகுதியிலிருந்து கோட்டமங்கலம் செல்லும் ரோடு, பிரிவதால், அங்கு விபத்துகள் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் ரோடு ஒருவழித்தடத்திலிருந்து இடைவழித்தடமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், அபாய வளைவு பகுதிகளில் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, வளைவு என்பதை வாகன ஓட்டுநர்களுக்கு தெரியும் வகையில், எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படவில்லை.அபாய வளைவுகளில் விபத்துகளை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி