உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை

அவிநாசி கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை

அவிநாசி : அவிநாசி கோவிலில், நேற்று புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.கொங்கேழு சிவாலயங்களில் பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்., 2ல் நடக்கிறது. இதற்காக கோவிலில் உள்ள மூலவர் சன்னதி உள் பிரகாரம் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் கல் தளம் அமைத்தல், ராஜ கோபுரத்திற்கு வண்ணம் தீட்டுதல், அம்மன் சன்னதி சுற்றிலும் நீராளி பத்தி அமைக்கும் வேலைகள், திருமாளிகை பத்தி மண்டபத்தில் கல் அமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், புதிய கொடிமரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிரேன் வாயிலாக, கொடிமரம் கோவில் வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், அறங்காவலர்கள் பொன்னுச்சாமி, ஆறுமுகம், செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், கொடி மர உபயதாரர் குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ