உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி பள்ளி ஆண்டு விழா

மாநகராட்சி பள்ளி ஆண்டு விழா

திருப்பூர் மாநகராட்சி, 22வது வார்டு கந்தசாமி லே - அவுட் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சின்னக்கண்ணு, காமராஜ் நற்பணி இயக்க தலைவர் பூமிநாதன், ஆசிரியர் பயிற்றுனர்கள் கோமதி, குமார், டாக்டர் சாலமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். பள்ளியில் முதல் மதிப்பெண் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி