உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண்காணிப்பு வளையத்தில் பஞ்சு மிட்டாய் வியாபாரிகள்

கண்காணிப்பு வளையத்தில் பஞ்சு மிட்டாய் வியாபாரிகள்

திருப்பூர்;புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை எதிரொலியாக, திருப்பூரிலும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 'பிங்க்' நிறத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயில் 'ரோடமின்-பி' என்ற ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.பஞ்சு மிட்டாயை உட்கொள்ளும் போது, இந்த ரசாயனம் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்பதை, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அதன் விளைவாக, அம்மாநிலத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அம்மாநில கவர்னர் தமிழிசை தடை விதித்தார். இதன் தாக்கம், மாநிலம் முழுக்க எதிரொலிக்க துவங்கியிருக்கிறது.திருப்பூர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது; திருப்பூரிலும், செயற்கை நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. வட மாநில இளைஞர்கள் தான், பஞ்சு மிட்டாய் வியாபாரத்தில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடை அமைத்து ஓரிடத்தில் நிரந்தரமாக இருப்பதில்லை; வீதி, தெரு என, சுற்றிக் கொண்டே இருப்பதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோ, நடவடிக்கை எடுப்பதோ சாத்தியமில்லை; காரணம், அவர்களை தேடி பிடிக்க முடியாது.மாறாக, பஞ்சு மிட்டாய் விற்றபடி அவர்கள் தென்பட்டால், அவர்களிடம் உள்ள செயற்கை நிறமியேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயை பறிமுதல் செய்கிறோம்; அத்தகைய பஞ்சு மிட்டாயை மீண்டும் விற்கக் கூடாது என, அறிவுறுத்துகிறோம்.கோவில் விழா உள்ளிட்ட, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பஞ்சு மிட்டாய் விற்பவர்களை கண் காணித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை