உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கைவினைப்பொருட்கள் கண்காட்சியில் அசத்தல்

 கைவினைப்பொருட்கள் கண்காட்சியில் அசத்தல்

உடுமலை;சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் கைவினைப்பொருட்கள் கண்காட்சி நடந்தது.மாணவர்களுக்கு ஆண்டுவிழாவையொட்டி, கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர் ஜெயலட்சுமி மாணவர்களுக்கு பல்வேறு கைவினைப்பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சி அளித்தார்.நேற்று பள்ளி அளவில் சிறப்பு கண்காட்சி நடந்தது. 6, 7, 8 வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். கொட்டாங்குச்சியில் பல்வேறு அலங்காரம் மற்றும் சிறிய வீட்டு பயன்பாட்டு பொருட்கள், வீணாகும் காகிதங்களில் மலர் கொத்து, தேர், தோகை விரித்துள்ள மயில், பரிசு பொருட்கள், மலர் கூடை, சுவர் அலங்கார பொருட்கள், பல்வேறு வடிவங்கள் என மாணவர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தினர்.தலைமையாசிரியர் இன்பகனி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம், சங்கத்தினர், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ