உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையோரக் கடைகளால் நெரிசல்

சாலையோரக் கடைகளால் நெரிசல்

பொங்கலுார்;பொங்கலுாரில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. வாரச்சந்தையில் வியாபாரிகளுக்கு வசதியாக கடைகள் கட்டப்பட்டுள்ளன.சில வியாபாரிகள் முன் பகுதியில் இருந்தால் வியாபாரம் நன்றாக நடக்கும் என்ற எண்ணத்தில், சந்தைக்குள் கடைகளை அமைக்காமல் ரோட்டோரம் கடை விரிக்கின்றனர். சந்தைக்கு வரும் பொதுமக்களின் வாகனங்களும் ரோட்டோரம் நிறுத்தப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கோவை, திருச்சி ரோடு, 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. ரோட்டோரம் கடை வைக்க தடை விதிக்க வேண்டும். அனைத்து வியாபாரிகளையும் சந்தைக்குள் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். ரோட்டோரம் வியாபாரம் செய்வதை அனுமதிக்கக்கூடாது என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்