உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தலைக்கு மேல் ஆபத்து

 தலைக்கு மேல் ஆபத்து

பொங்கலுார்: மணியம்பாளையத்தில் அரசு பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. அதிலிருந்து தான் பள்ளி குழந்தைகள், அங்கன்வாடி மையம் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கம்பிகள் துருப்பிடித்து உள்ளது. காரை பெயர்ந்து கான்கிரீட் சிதிலமடைந்து வருகிறது. பள்ளி மாணவர்கள் பலரும் பள்ளி வளாகத்தில் விளையாடுவது வாடிக்கை. தண்ணீர் தொட்டி சரிந்து விழுந்தால் பிஞ்சுக் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே, காரை பெயர்ந்த துாண்களை உடனடியாக பலப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக மேல்நிலைத் தொட்டி கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்