உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகா பெரியவா அனுஷ பூஜை: பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை

மகா பெரியவா அனுஷ பூஜை: பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை

உடுமலை: உடுமலை ஜி.டி.வி., லே-அவுட் செல்வ விநாயகர் கோவிலில், காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நேற்று நடந்தது. விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, சங்கல்பம், பீட பூஜை, அனுஷ பிரதான பூஜை, சித்திர பட ஆவாஹனம், குருத்யானம், பூரண கும்ப மரியாதை, காஞ்சி மகா பெரியவர் அஷ்டோத்திர அர்ச்சனை நடைபெற்றது. பின்னர், வேதபாராயணம், காஞ்சி மட ஸ்வஸ்தி வசனம், விநாயகர் அகவல், சிவபுராணம் உள்ளிட்ட பாராயணங்கள் நடைபெற்றது. தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உலக அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஆரோக்கியத்துக்கு கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. அனுஷ பூஜை ஏற்பாடுகளை, செல்வ விநாயகர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை