உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிருத்திகை விழா பக்தி இன்னிசை

கிருத்திகை விழா பக்தி இன்னிசை

உடுமலை : ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு, உடுமலையில் பக்தி இன்னிசை நாளை நடக்கிறது.உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், ஒவ்வொரு மாதமும் கிருத்திகையொட்டி, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஆன்மிக ஆர்வலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.இந்நிலையில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ஆனிமாத கிருத்திகையையாட்டி பக்தி இன்னிசை நிகழ்ச்சி நாளை (22ம் தேதி) நடைபெறுகிறது.இதில், நாளை மாலை, 7:00 மணிக்கு, இம்மன்றத்தின் 813வது நிகழ்ச்சியாக, ஸ்ரீவர்ணமாலிகா இசை பயிற்சி பள்ளியின் மாணவ, மாணவியரின் இன்னிசை நடக்கிறது.இந்நிகழ்ச்சியில், உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமப்புற பகுதிகளிலிருந்து, திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை கார்த்திகை விழா மன்ற தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை