| ADDED : செப் 23, 2011 10:03 PM
திருப்பூர் : பனியன் தொழிலை காப்பாற்ற, 'டியூட்டி டிராபேக்' சலுகையை 20
சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என, கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை
வலியுறுத்தி உள்ளது. கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை ஆலோ சனை கூட்டம்,
திருப்பூரில் நடந்தது. மாநில தொழிற்சங்க செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சந்திரசேகர் வர வேற்றார். மாநில தொழிற்சங்க அமைப்பாளர்
முருகேசன், மாவட்ட பேரவை தலைவர் கோவிந்த சாமி, தெற்கு மண்டல அமைப்பாளர்
ராமசாமி முன்னிலை வகித்தனர். கொ.மு.க.,மற்றும் கொங்கு வேளாளக் கவுண்டர் கள்
பேரவை செயல்பாடுகள் குறித்தும், எதிர் கால திட்டங்கள் குறித்தும்
கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. விசைத்தறி கூலி உயர்வு பிரச்னையால், பெரும்
வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், தமிழக முதல்வர் தலையிட்டு, சுமூக
உடன்பாடு ஏற்படுத்த வேண்டும். அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை விரைந்து
நிறைவேற்ற வேண்டும். கோவை மார்க்கமாக செல்லும் சில ரயில்கள் கோவை
சந்திப்புக்கு வராமல், போத்தனூர் மார்க்கமாக சென்று வருகிறது. அனைத்து
ரயில்களும் கோவை சந்திப்புக்கு வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ள பனியன் தொழிலை பாதுகாக்க, 'டியூட்டி
டிராபேக்' சலுகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.