உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / "மாஜி ராணுவத்தினருக்கு அழைப்பு

"மாஜி ராணுவத்தினருக்கு அழைப்பு

திருப்பூர் : இலவச தொழிற்பயிற்சி வகுப்பில் சேர முன்னாள் ராணுவத்தினர் மற்றும் குடும்பத்தாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை:முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை சேர்ந்த 35 வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கு பனியன் நிறுவனங்களில் தையல் பணி, ஆடை உற்பத்தி தரம் கண்டறியும் பணி மற்றும் முன்னணி நிறுவனங்களில் நுகர்வோர் சேவை மற்றும் உதவியாளர் பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.'எவர் ஆன் ஸ்கில் டெவலப்மெண்ட்' நிறுவனத்தில் உதவித்தொகையுடன் கூடிய இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதில் சேர விருப்பமுள்ள, தகுதி உடைய முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கோவை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து பயிற்சியில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு, 0422 - 2214107 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை