உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

திருப்பூர் : விளைச்சல் அதிகரித்துள்ளதால், திருப்பூர் உழவர் சந்தைக்கு தக்காளி, பச்சை மிளகாய் வரத்து அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.2 முதல் 4 வரை விலை சரிந்துள்ளது. வடக்கு உழவர் சந்தையில் நேற்று, தக்காளி கிலோ ரூ.5; கத்தரி 14; சின்ன வெங்காயம் 16; பெரிய வெங்காயம் 20; வெண்டை 12; அவரை 18; புடலை 16; பீர்க்கன் 16; பாகல் 16; பூசணி, அரசாணி 8 ரூபாய்; காரட் 25; பீட்ரூட் 20; உருளைக்கிழங்கு 16; கோஸ் 12; கீரை 10; பச்சை மிளகாய் (குண்டு) 22, சம்பா 22 ரூபாய்; கறிவேப்பிலை 15; முருங்கைகாய் 20; கொத்தமல்லி 10; மேரக்காய் 16; புதினா 12 ரூபாய் என விற்கப்பட்டது.உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராமலிங்கம் கூறியதாவது:உழவர் சந்தைக்கு சேயூர், சொக்கனூர், நம்பியூர் பகுதிகளில் இருந்து தக்காளி, பச்சை மிளகாய் வரத்து அதிகரித்துள்ளது; வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த வாரம் ஏழு ரூபாயாக இருந்த தக்காளி இவ்வாரம் கிலோவுக்கு இரண்டு ரூபாய் விலை குறைந்துள்ளது; சம்பா ரகம் ரூ.20, குண்டு ரகம் 26 ரூபாயாக இருந்த பச்சை மிளகாய் விலையும் சரி பாதியாக குறைந்துள்ளது. லாரி ஸ்டிரைக் காரணமாக மகாராஷ்டிரா பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது; இதனால், உள்ளூர் பெரிய வெங்காயம் விலை கிலோவுக்கு மூன்று ரூபாய் விலை அதிகரித்துள்ளது. ஸ்டிரைக் தொடர்ந்தால், பெரிய வெங்காயம் விலை மேலும் அதிகரிக்கும்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ