உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உள்ளாட்சி தேர்தல் பணி; ஆசிரியர் விவரம் சேகரிப்பு

உள்ளாட்சி தேர்தல் பணி; ஆசிரியர் விவரம் சேகரிப்பு

திருப்பூர் : உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுத்தஆசிரியர்கள் குறித்த விவரங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் பெறும் பணி துவங்கியது.உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலகம் (உள்ளாட்சி)துவக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற அலுவலர்கள் நியமிப்பதற்கானஏற்பாடுகள் நடந்துவருகின்றன.பகுதி வாரியாக உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற ஓட்டுப்பதிவு அலுவலர்உள்ளிட்ட அலுவலர்கள் நியமிக்கப்படுவர். இதற்காக, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் குறித்த விவரங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன. இதனடிப்படையில், ஓட்டுச்சாவடிகளில்ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை