உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரதிநிதித்துவம் அளிக்க "டீமா வேண்டுகோள்

பிரதிநிதித்துவம் அளிக்க "டீமா வேண்டுகோள்

திருப்பூர் : 'திருப்பூர் மாவட்ட தொழில் வளர்ச்சி ஆலோசனை குழுவில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்,' என, 'டீமா' சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம், ஊரக தொழில் துறை அமைச்சர் சண்முகவேலுவுக்கு அனுப்பியுள்ள கடிதம்: எங்களது சங்கத்தில், ஆயிரத்துக்கும் அதிகமான சிறு, குறு உற்பத்தியாளர்கள் உறுப்பினராக உள்ளனர். பின்னலாடை தொழில் துறையில் ஏற்படும் பிரச்னைகளை, அரசு கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு காண்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். சிறு, குறு உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அரசு, கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட தொழில் வளர்ச்சி ஆலோசனை குழு அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இதன் மூலமாக, தொழில் துறை மேம்பாடு, தொழில் துறையில் ஏற்படும் இடர்பாடுகள், புதிய தொழில் முறைகளை பரிசீலனை செய்ய ஏதுவாக இருக்கும். திருப்பூர் மாவட்டத்தில் அமையும் ஆலோசனை குழுவில் 'டீமா' சங்கத்துக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்