உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடை பராமரிப்பு முகாம்

கால்நடை பராமரிப்பு முகாம்

உடுமலை : உடுமலை அருகே செல்வபுரத்தில் நடந்த சிறப்பு கால்நடை பராமரிப்பு முகாமில் 1,034 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடுமலை கால்நடை பராமரிப்பு துறை கட்டுப்பாட்டிலுள்ள கால்நடை மருந்தகங்கள் சார்பில் கிராமங்களில் சிறப்பு பராமரிப்பு முகாம் நடத்தப்படுகிறது. கல்லாபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் நேற்று செல்வபுரம் கிராமத்தில் சிறப்பு முகாம் நடந்தது. கால்நடை மருத்துவர் சதிஷ்குமார், இளநிலை கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். 30 மாடுகளுக்கு சினை ஊசி, 357 வெள்ளாடு மற்றும் 186 செம்மறியாடுகளுக்கு குடற்புழு நீக்கம், 498 மாடுகளுக்கு தடுப்பூசி உட்பட 1,034 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறப்பாக பராமரிக்கப்படும் எட்டு கன்றுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. கால்நடை ஆய்வாளர்கள் தங்கவேல், அப்துல்கலாம், சுப்பிரமணியம் சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ