உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சித்த மருத்துவ பிரிவு கட்டடம் திறப்பு

சித்த மருத்துவ பிரிவு கட்டடம் திறப்பு

உடுமலை : ஜல்லிபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 3.50 லட்சம் ரூபாய் செலவில் சித்த மருத்துவப்பிரிவு கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை ஊரக தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு துவக்கி வைத்தார்.திருப்பூர் மாவட்ட இணை இயக்குனர் திருமலைசாமி தலைமை வகித்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். ஜல்லிபட்டி மருத்துவ அலுவலர் சதிஷ், சித்த மருத்துவ அலுவலர் முருகேசன், டாக்டர்கள் தேவதாஸ், லட்சுமிபதிராஜ், கணேஷ்பாபு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை